Posts

மாவீரன் அலெக்ஸாண்டர்

Image
மாவீரன் அலெக்ஸாண்டர் பிறப்பு கி.மு 356-ஆம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி மாஸிடோனியாவில மன்னர் பிலிப்ஸ்க்கு  மகனாக கிரேக்க மண்ணில் உதித்தது அலெக்ஸாண்டர் என்ற வீரக்குழந்தை. குழந்தை பிறந்த நேரம் பிலிப்ஸ் மன்னன் அகமகிழ்ந்தான் காரணம் அதே நேரம்தான் பிலிப்ஸின் ராசியான குதிரை ஒலிம்பிக் விளையாட்டில் வெற்றிபெற்றிருந்தது. அலெக்ஸாண்டர் இந்த உலகை கட்டி ஆள்வான் என்று அரச சோதிடர்கள் கணித்து சொன்னதும் மன்னன் பிலிப்ஸின் மகிழ்ச்சிக்கு காரணம். அறிவுக்கூர்மையும் அதீத வீரமும் பிறந்ததிலிருந்தே அலெக்ஸாண்டரிடம் அறிவுக்கூர்மையும் அதீத வீரமும் குடிகொண்டிருந்தன. அலெக்ஸாண்டர் சிறுவயதாக இருந்தபோது நடந்த சம்பவம் இது. தன் தந்தை பிலிப்ஸ் சிலிரியா நாட்டில் படையெடுப்பு நடத்திக்கொண்டிருந்தபோது மாசிடோனியாவில் படைவீரர்கள் சில கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்வதை பார்த்த அலெக்ஸாண்டர் நீதிமன்றத்திற்குள் நுழைந்தார். அங்கே அந்த கைதிகள் புரட்சியில் ஈடுபட்டதாக கூறி அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட்து. இளவரசன் அலெக்ஸாண்டர் நீதிபதியைப் பார்த்து நான் ஏதாவது சொல்லலாமா? என்று கேட்டார், இளவரசன் என்பதால் நீதிபதியும் இணங்...

கம்பர்

Image
கம்பர் பிறந்த ஊர்: தேரழுந்தூர், மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது (சோழநாட்டுத் திருவெழுந்தூர்) இறந்த ஊர்: பாண்டி நாட்டு நாட்டரசன்கோட்டை தந்தை: ஆதித்தன் போற்றிவர்: திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல் காலம்: 12 ஆம் நூற்றாண்டு பொயர்கள் : சயங்கொண்டார், ஒட்ட்க்கூத்தர், புகழேந்தி புலவர் ஆகியோர் கம்பர் காலத்துப் புலவர்கள். பாடல்கள் :கம்பர் 1௦௦௦ பாடலுக்கு ஒருமுறை சடையப்ப வள்ளலைப் பாடியுள்ளார். நூல்கள்: ஏர் எழுபது, திருக்கை வழக்கம்(இரண்டும் உழவு பற்றியது), கம்பராமாயணம், சடகோபர் அந்தாதி, சரசுவதி அந்தாதி மகன் ; கம்பர் மகன் அம்பிகாபதி நூல் : அம்பிகாபதி எழுதியது அம்பிகபதிக்கோவை சிறப்பு: கம்பன்வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும், கல்வியில் பெரியர் கம்பர், வெண்பா பாடுவதில் வல்லவர், விருதப்பா பாடுவதில் வல்லவர். புகழுரைகள்: “கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்” “கம்பனைப் போல் வள்ளுவனைப் போல் இலங்கோவடிகள் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை” “யாமறிந்த புலவரிலே” -பாரதி உழவின் சிறப்பு மேழி- கலப்பை, ஏர்; வேந்தர்- மன்னர்; ஆழி- மோதிரம்; சூழ்வினை-உண்டாகும் வறுமைத் துன்பம்; ...

பாரதிதாசன்

Image
பாரதிதாசன் அறிமுகம் “தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் அவர்கள், ‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர், பாரதிதாசன் அவர்கள். தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்று சொன்னால் அது மிகையாகாது. தனது படைப்புகளுக்காக ‘சாஹித்ய அகாடமி விருது’ பெற்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்மொழியில் இன்றளவும் நிலைத்துநிற்கும் அவரது தலைச்சிறந்த படைப்புகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும். பிறப்பு: ஏப்ரல் 29, 1891 பிறப்பிடம்: புதுவை இறப்பு: ஏப்ரல் 21, 1964 பணி: தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி நாட்டுரிமை: இந்தியன் பிறப்பு பாவேந்தர் பாரதிதாசன...

பால கங்காதர திலகர்

Image
பால கங்காதர திலகர் லோகமான்ய பாலகங்காதர திலகர் ஒரு விடுதலைப் போராட்ட வீரர், தேசியவாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இந்தியாவிற்கு தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். “சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” என முழங்கியவர். ‘இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை’ என கருதப்படும் பாலகங்காதர திலகரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம். பிறப்பு: ஜூலை 23,  1856 இடம்: ரத்தினகிரி, மகாராஷ்டிரா மாநிலம், இந்தியா பணி: சுதந்திரப் போராட்ட வீரர் இறப்பு: ஆகஸ்ட் 1, 1920 நாட்டுரிமை: இந்தியன் பிறப்பு ‘பால கங்காதர திலகர்’ என அழைக்கப்படும் லோகமான்ய திலகர் அவர்கள், 1856  ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23  ஆம் நாள் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள “ரத்தினகிரி” என்ற இடத்தில், கங்காதர் ராமச்சந்திரா திலக் என்பவருக்கும், பார்வதி பாய் கங்காதருக்கும் மகனாக மராத்தி சித்பவன் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். திலகரின் தந்தை ஆசிரியராகவும், சமஸ்கிருதத்தில் புலமைப் பெற்றவராகவும் விளங்கினார். ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி திலகர் தன்னுடைய பள்ளிப்படிப்பை, ப...

ஆர். வெங்கட்ராமன்

Image
ஆர். வெங்கட்ராமன் சுதந்திர இந்தியாவின் எட்டாவது குடியரசு தலைவரும், உண்மையான தேசபக்தரும், வழக்கரிஞரும், சிறந்த பணியாளரும் மற்றும் நாட்டின் முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை கொண்டவருமான ஆர்.வெங்கட்ராமனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை பற்றி விரிவாக காண்போம். பிறப்பு:டிசம்பர் 4, 1910 இடம்:தஞ்சாவூர், தமிழ்நாடு மாநிலம், இந்தியா இறப்பு:ஜனவரி 27, 2009 பணி: வழக்கறிஞசர், சுதந்திர போராட்ட வீரர், அரசியல்வாதி, நாட்டுரிமை:இந்தியா பிறப்பு ஆர்.வெங்கட்ராமன் அவர்கள், 1910 ஆம் ஆண்டு இந்தியாவின் தமிழ்நாட்டு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள ராஜாமடம் என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தார்.  இவருடைய இயற்பெயர் ராமசாமி வெங்கட்ராமன். ஆரம்ப வாழ்க்கை ஆர்.வெங்கட்ராமன் அவர்கள், தனது பள்ளிப்படிப்பை பட்டுகோட்டையில் தொடங்கினார். பின்னர், மேற்படிப்பிற்காக சென்னை சென்ற அவர் “லயோலா கல்லூரியில்” பொருளாதாரத்துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். சென்னை சட்ட கல்லூரியில் தனது சட்டப்படிப்பை முடித்த அவர், 1935 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞராக...

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

Image
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ‘வீ. ராதாகிருஷ்ணன்’ என்றழைக்கப்படும் ‘சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்’ அவர்கள், சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கி,  எண்ணற்ற டாக்டர் பட்டங்கள் பெற்று, நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளே ‘ஆசிரியர் தினமாக’ செப்டம்பர் 5-ம் தேதி, ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. ஒரு ஆசிரியராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பாரத நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி மேலுமறிய தொடர்ந்துப் படிக்கவும். பிறப்பு: செப்டம்பர் 5, 1888 பிறப்பிடம்: சர்வபள்ளி கிராமம், திருத்தணி, தமிழ்நாடு, இந்தியா இறப்பு: ஏப்ரல் 17, 1975 தொழில்: அரசியல்வாதி, தத்துவவாதி, பேராசிரியர் நாட்டுரிமை: இந்தியா பிறப்பு சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், 1888 செப்டம்பர் 5-ம் தேதி திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில், ஏழை தெலுங்கு நியோகி என்ற பிராமணப்பிரிவில் சர்வபள்ளி வீராசாமிக்கும், சீதம்மாக்கும...

ஜவகர்லால் நேரு

Image
ஜவகர்லால் நேரு இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஜவகர்லால் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இந்தியாவை வழிநடத்தியவர் ஆவார். அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவரில் ஒருவராகவும், சுதந்திரப்போராட்ட வீரராகவும், இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன், கல்வி முன்னேற்றம் குறித்துப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவரும், “நவீன இந்தியாவின் சிற்பி” எனவும் கருதப்படும் ஜவகர்லால் நேருவின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைப் பற்றி விரிவாக காண்போம். பிறப்பு: நவம்பர் 14, 1889 இடம்: அலகாபாத், உத்திரப் பிரதேசம் (இந்தியா) பணி: சுதந்திர போராட்ட வீரர், அரசியல் தலைவர் இறப்பு: மே 27, 1964 நாட்டுரிமை: இந்தியா பிறப்பு ஜவகர்லால் நேரு அவர்கள், இந்தியாவின் உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அலகாபாத் மாவட்டத்தில் பெரிய செல்வந்தரும், வழக்கறிஞருமான மோதிலால் நேருவுக்கும், சுவரூப ராணி அம்மையாருக்கும் மூத்த மகனாக ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். நேருவுக்கு, விஜயலட்சுமி பண்டிட் மற்றும் கிருஷ்ணா என்ற இரு சகோதரிகள் இருந்தனர். ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி ...