மாவீரன் அலெக்ஸாண்டர்
மாவீரன் அலெக்ஸாண்டர் பிறப்பு கி.மு 356-ஆம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி மாஸிடோனியாவில மன்னர் பிலிப்ஸ்க்கு மகனாக கிரேக்க மண்ணில் உதித்தது அலெக்ஸாண்டர் என்ற வீரக்குழந்தை. குழந்தை பிறந்த நேரம் பிலிப்ஸ் மன்னன் அகமகிழ்ந்தான் காரணம் அதே நேரம்தான் பிலிப்ஸின் ராசியான குதிரை ஒலிம்பிக் விளையாட்டில் வெற்றிபெற்றிருந்தது. அலெக்ஸாண்டர் இந்த உலகை கட்டி ஆள்வான் என்று அரச சோதிடர்கள் கணித்து சொன்னதும் மன்னன் பிலிப்ஸின் மகிழ்ச்சிக்கு காரணம். அறிவுக்கூர்மையும் அதீத வீரமும் பிறந்ததிலிருந்தே அலெக்ஸாண்டரிடம் அறிவுக்கூர்மையும் அதீத வீரமும் குடிகொண்டிருந்தன. அலெக்ஸாண்டர் சிறுவயதாக இருந்தபோது நடந்த சம்பவம் இது. தன் தந்தை பிலிப்ஸ் சிலிரியா நாட்டில் படையெடுப்பு நடத்திக்கொண்டிருந்தபோது மாசிடோனியாவில் படைவீரர்கள் சில கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்வதை பார்த்த அலெக்ஸாண்டர் நீதிமன்றத்திற்குள் நுழைந்தார். அங்கே அந்த கைதிகள் புரட்சியில் ஈடுபட்டதாக கூறி அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட்து. இளவரசன் அலெக்ஸாண்டர் நீதிபதியைப் பார்த்து நான் ஏதாவது சொல்லலாமா? என்று கேட்டார், இளவரசன் என்பதால் நீதிபதியும் இணங்...